Saturday, 3 September 2011
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்...!
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானிலம் மீதினில் யார் இனி வருவார்
வீணையில் இன்னிசை தேனென தந்திடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
விண்ணையும் மண்ணையும் பண்ணையும் தந்தவன்
என்னையும் உன்னையும் பாடிட வைத்திடுவான்
பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
உன்னை வென்றிடுவேன்
இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன்
எனை தேடி எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன்
எனை தேடி எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
நடித்தான் தமிழை படைத்தான்
இசையை வடித்தான் தன்னை மறந்தனனே
முத்தமிழ் புலமை சித்தனும் எனது வித்தகம் கண்டு பரிவுடனே
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
யாரபிமானம் மானம் கொள்வார்
யாரபிமானம் மானம் கொள்வார்
பெரும் அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே
அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே
யாரபிமானம் மானம் கொள்வார்
வெற்றி எட்டு திசை முட்டவே
பெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா
தனித்து நினைத்து மனத்தை மறைத்து
கொடுத்த வரத்தை கணத்தில் மறந்தனையே
யாரபிமானம் மானம் கொள்வார்
சண்முகப்பிரியன் எனும் தைரியமா
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
சண்முகப்பிரியன் எனும் தைரியமா
இனிய சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
நாடகமா தர்பார் நாடகமா
அடக்குமுறை தர்பார் நாடகமா
எதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
அம்சத்வனி அமைந்த மன்னவன் நான்
அனைத்தும் உன் வசம்தானா ஆணவம் ஏன்
அம்சத்வனி அமைந்த மன்னவன் நான்
அனைத்தும் உன் வசம்தானா ஆணவம் ஏன்
மோகன கானம் நான் மீட்டிடுவேன்
மனோ லயம் இல்லை உன் பாட்டினிலே
மோகன கானம் நான் மீட்டிடுவேன்
மனோ லயம் இல்லை உன் பாட்டினிலே
பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
யார் வந்தால் என்ன காம்போதி
யார் வந்தால் என்ன காம்போதி
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
கௌரி மனோகரி துணை இருப்பாள்
கௌரி மனோகரி துணை இருப்பாள்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
சரஸ்வதி என்நாவில் குடியிருப்பாள்
சரஸ்வதி என்நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
உன்னை வென்றிடுவேன்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment