வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார் வகுத்த உயர்நெறியே சன்மார்க்க சங்கமாய் உருவாகியது. அனைத்து உயிகளிடத்திலும் அன்பு செய்தலே சன்மார்க்கத்தின் முக்கியக் கொள்கை. சிறந்த மனிதநேயம் கொண்ட இவர். 'உயிர்களிடத்து இரக்கம் காட்டுங்கள். எல்லா உயிர்களையும் உங்களுடைய உயிர் போலவே எண்ணுங்கள், பாவியுங்கள்' என்று ஜீவ காருண்யத்தைப் போதித்தவர்.
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன்,பசியினால் இளைத்தே
வீடு தோறிரந்தும் பசியறாதயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதித்தேன்..."
என்கிற பாடல் அவரது ஜீவகாருண்ய கொள்கையை உணர்த்தும். நிலம் வறண்டு போனாலும் மனிதனது மனம் வறண்டு போய்விடக்கூடாது என்பது அவரது எண்ணம்.
இராமலிங்க அடிகளாரின் பாடல்களில் தாயுமானவர், திருமூலர் போன்றோரின் சாயல் தென்படும். நாயன்மார்களில் ஒருவரான ஞானசம்பந்தரே இவருடைய மானசீக குரு. இராமலிங்கருக்கு இரவில் பாட்டெழுதுவது மிகவும் பிடித்தமான செயல். அருகே ஒரு எண்ணெய் விளக்கு வைத்துக் கொண்டு எழுதுவார்.
இப்படி எழுதும் போது ஒரு நாள் விளக்கிலே எண்ணெய் தீர்ந்து போய்விட்டது. எண்ணெய்ப் பாத்திரம் என்று நினைத்து பக்கத்தில் உள்ள தண்ணீர் பாத்திரத்திலிருந்து நீர் ஊற்றினார். விளக்கு அணையவில்லை. தொடர்ந்து எரிந்தது.
இதனை அவர் சீடர்களில் ஒருவரான தொழுதூர் வேலாயுதம் கண்டு வியந்தார். பின்னர்..
தண்ணீர் விளக்கெரித்த தன்மைபோல் மாந்தர்தம்
உண்ணீர் சிவம்விளங்க ஓங்குவிக்கும் கண்மணியாம்
எங்கள் இராமலிங்கர் நல்ல அருட்பா முறையைத்
துங்கமுற மாணா தொழு.
இவ்வாறு தனது குருநாதரை போற்றி பாடினார்.
Tuesday, 6 December 2011
Saturday, 3 December 2011
சக்தி இல்லையேல் சிவனில்லை!
பிருங்கி முனிவர் வெகுகாலம் தவம் செய்து அஷ்டமா சித்துக்களையும் பெற்றிருந்தார். சிவனை மட்டுமே வழிபடுபவர். தினசரி சிவலோகம் சென்று சிவனை சுற்றிவந்து வழிபட்டுவிட்டு தான் அன்றைய வேலைகளை கவனிப்பார். இதைப் பார்த்த அன்னை பராசக்தி, சிவனிடம் நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் போது பிருங்கி என்னைவிட்டு விட்டு உங்களை மட்டும் வழிபடுவது சரியா என்று கேட்டாள். அதற்கு சிவனோ அவன் என் மீது அளவு கடந்த பக்தி கொண்டவன். என்னை வழிபட்டாலே உன்னையும் வழிபடுவது போல தான். அதனால் தவறாக எண்ணாதே என்று சொல்லிவிட்டார்.
ஆனால் சக்தி சமாதானம் அடையாமல் நாம் இருவரும் அர்த்தநாரியாக அமர்ந்து இருப்போம் அப்போது என்ன செய்கிறான் பார்ப்போம் என்று சொல்ல சிவனும் அதற்கு சம்மதித்தார். எப்போதும் போல சிவனை வழிபட வந்த பிருங்கி முனிவர் அர்த்தநாரியாக அமர்ந்து இருப்பதை பார்த்து ஒரு வண்டாக உருமாறி சிவனின் பாகத்தை மட்டும் சுற்றி வந்து வழிபாட்டு விட்டு பிறகு தன்னுடைய உருவத்திற்கு மாறி செல்ல முற்பட்டார்.
இதைக்கண்டு கடுங்கோபம் கொண்ட சக்தி, பிருங்கி முனிவரை தடுத்து என்னுடைய சக்தி இருப்பதால் தானே சிவனை சுற்றி வருகிறாய் என்று சொல்லி அவரிடமிருந்த சக்தி முழுவதையும் பறித்து விட்டாள். சக்தியை இழந்த பிருங்கி முனிவரின் உடம்பில் இருந்த சதைகள் எல்லாம் அற்று விழ வெறும் எலும்புக்கூடோடு ஜீவனை மட்டும் விடாது இருந்தார். சக்தி போனதால் அவரிடமிருந்த அஷ்டமா சித்துக்களும் போய்விட்டன. ஜீவனும் போகும் தருவாயில் சிவன் தன் தண்டத்தை எலும்புக்கூட்டிடம் கொடுத்து காப்பாற்றி, சக்தியிடம் அவர் உடம்பை தருமாறு கூறினார்.
சக்தியும் சிவன் கூறியபடியே பிருங்கி முனிவரிடம் பறித்த சக்திகளை எல்லாம் திருப்பி கொடுத்தாள். பிருங்கி முனிவரும் தன் தவறை உணர்ந்து அன்னையிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவனும் பராசக்தியும் மனம் குளிர்ந்து பிருங்கி முனிவரை வாழ்த்தினர்.
ஆனால் சக்தி சமாதானம் அடையாமல் நாம் இருவரும் அர்த்தநாரியாக அமர்ந்து இருப்போம் அப்போது என்ன செய்கிறான் பார்ப்போம் என்று சொல்ல சிவனும் அதற்கு சம்மதித்தார். எப்போதும் போல சிவனை வழிபட வந்த பிருங்கி முனிவர் அர்த்தநாரியாக அமர்ந்து இருப்பதை பார்த்து ஒரு வண்டாக உருமாறி சிவனின் பாகத்தை மட்டும் சுற்றி வந்து வழிபாட்டு விட்டு பிறகு தன்னுடைய உருவத்திற்கு மாறி செல்ல முற்பட்டார்.
இதைக்கண்டு கடுங்கோபம் கொண்ட சக்தி, பிருங்கி முனிவரை தடுத்து என்னுடைய சக்தி இருப்பதால் தானே சிவனை சுற்றி வருகிறாய் என்று சொல்லி அவரிடமிருந்த சக்தி முழுவதையும் பறித்து விட்டாள். சக்தியை இழந்த பிருங்கி முனிவரின் உடம்பில் இருந்த சதைகள் எல்லாம் அற்று விழ வெறும் எலும்புக்கூடோடு ஜீவனை மட்டும் விடாது இருந்தார். சக்தி போனதால் அவரிடமிருந்த அஷ்டமா சித்துக்களும் போய்விட்டன. ஜீவனும் போகும் தருவாயில் சிவன் தன் தண்டத்தை எலும்புக்கூட்டிடம் கொடுத்து காப்பாற்றி, சக்தியிடம் அவர் உடம்பை தருமாறு கூறினார்.
சக்தியும் சிவன் கூறியபடியே பிருங்கி முனிவரிடம் பறித்த சக்திகளை எல்லாம் திருப்பி கொடுத்தாள். பிருங்கி முனிவரும் தன் தவறை உணர்ந்து அன்னையிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். சிவனும் பராசக்தியும் மனம் குளிர்ந்து பிருங்கி முனிவரை வாழ்த்தினர்.
Friday, 4 November 2011
திருநீறு குழந்தையான கதை...!
மச்சேந்திரர் ஒரு ஊரின் வழியாக சென்று கொண்டிருந்த போது ஒரு பெண் அவரைக் கண்டு பிச்சையிட்டாள். ஆனால் அவளது முகம் வாடியிருந்தது. அதைக் கண்ணுற்ற மச்சேந்திரர் உன் குறை என்ன என்று கேட்க அவளோ தனக்கு மக்கட்பேறு இல்லை எனக் கூறினாள்.
மச்சேந்திரர் அவள் மீது இரக்கம் கொண்டு சிறிது திருநீற்றை அளித்தார். இதனை நீ உட்கொண்டால் மக்கட்பேற்றை அடைவாய் என்று வாழ்த்திச் சென்றார்.
திருநீறு பெற்றவள் அதனை உட்கொள்ளாமல் பக்கத்து வீட்டுக்காரியிடம் தெரிவித்தாள். பக்கத்து வீட்டுக்காரியோ உனக்கு திருநீறு கொடுத்தவர் போலித்துறவியா கூட இருக்கலாம். உன்னை மயக்கி அடைவதற்காக கூட இத்திருநீற்றை கொடுத்து இருக்கலாம் என்று கூறினாள். ஆகவே நீ திருநீற்றை உட்கொள்ளாதே என்றாள்.
இதனால் அச்சம் அடைந்த அப்பெண் தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் போட்டுவிட்டாள்.
சில ஆண்டுகள் கழித்து மச்சேந்திரர் மறுபடியும் அந்த ஊருக்கு வந்தார். தான் முன்பு பிள்ளைப்பேற்றிற்காக திருநீறு அளித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று,அம்மணி உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும் அவனை அழைப்பாயாக என்றார்.
பக்கத்து வீட்டுக்காரியின் பேச்சைக் கேட்டு திருநீற்றை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு இப்போது குழந்தை இல்லாமல் வருந்தும் நிலையைக் கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள்.
அவளது நிலையைக் கண்டு மனம் இரங்கிய மச்சேந்திரர், சரி அந்த திருநீற்றை எங்கு கொட்டினாய் என்றார். அவளும் அடுப்பு சாம்பலை வழக்கமாக கொட்டும் இடத்தில் தான் அந்த திருநீறு இருந்த சாம்பலையும் கொட்டியதாக சொல்லி, அச்சாம்பல் கொட்டப்பட்டு இருந்த குப்பை மேட்டை காட்டினாள்.
மச்சேந்திரர் குப்பைப்பட்டரையிடம் சென்று கோரக்கா என்று கூப்பிட்டார். குப்பைப் பட்டறையில் இருந்து ஏன் என்னும் ஒலி கேட்டது.
மச்சேந்திரர் அங்கிருந்தவர்களிடம் குப்பையை அகற்றுமாறு கூறினார். அதிலிருந்து குழந்தை ஒன்று, மச்சேந்திரர் திருநீறு கொடுத்த காலத்திலிருந்து இருக்க வேண்டிய வளர்ச்சியோடு வெளியில் வந்தது.
மச்சேந்திரர் அக்குழந்தையை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். ஆனால் அக்குழந்தையோ பெண்மணியிடம் இருக்கப் பிடிக்காமல் மச்சேந்திரரை பின் தொடர்ந்து சென்று பெரிய சித்தர் ஆகி குருவை மிஞ்சிய சீடர் ஆனார்.
மச்சேந்திரர் அவள் மீது இரக்கம் கொண்டு சிறிது திருநீற்றை அளித்தார். இதனை நீ உட்கொண்டால் மக்கட்பேற்றை அடைவாய் என்று வாழ்த்திச் சென்றார்.
திருநீறு பெற்றவள் அதனை உட்கொள்ளாமல் பக்கத்து வீட்டுக்காரியிடம் தெரிவித்தாள். பக்கத்து வீட்டுக்காரியோ உனக்கு திருநீறு கொடுத்தவர் போலித்துறவியா கூட இருக்கலாம். உன்னை மயக்கி அடைவதற்காக கூட இத்திருநீற்றை கொடுத்து இருக்கலாம் என்று கூறினாள். ஆகவே நீ திருநீற்றை உட்கொள்ளாதே என்றாள்.
இதனால் அச்சம் அடைந்த அப்பெண் தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் போட்டுவிட்டாள்.
சில ஆண்டுகள் கழித்து மச்சேந்திரர் மறுபடியும் அந்த ஊருக்கு வந்தார். தான் முன்பு பிள்ளைப்பேற்றிற்காக திருநீறு அளித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று,அம்மணி உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும் அவனை அழைப்பாயாக என்றார்.
பக்கத்து வீட்டுக்காரியின் பேச்சைக் கேட்டு திருநீற்றை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு இப்போது குழந்தை இல்லாமல் வருந்தும் நிலையைக் கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள்.
அவளது நிலையைக் கண்டு மனம் இரங்கிய மச்சேந்திரர், சரி அந்த திருநீற்றை எங்கு கொட்டினாய் என்றார். அவளும் அடுப்பு சாம்பலை வழக்கமாக கொட்டும் இடத்தில் தான் அந்த திருநீறு இருந்த சாம்பலையும் கொட்டியதாக சொல்லி, அச்சாம்பல் கொட்டப்பட்டு இருந்த குப்பை மேட்டை காட்டினாள்.
மச்சேந்திரர் குப்பைப்பட்டரையிடம் சென்று கோரக்கா என்று கூப்பிட்டார். குப்பைப் பட்டறையில் இருந்து ஏன் என்னும் ஒலி கேட்டது.
மச்சேந்திரர் அங்கிருந்தவர்களிடம் குப்பையை அகற்றுமாறு கூறினார். அதிலிருந்து குழந்தை ஒன்று, மச்சேந்திரர் திருநீறு கொடுத்த காலத்திலிருந்து இருக்க வேண்டிய வளர்ச்சியோடு வெளியில் வந்தது.
மச்சேந்திரர் அக்குழந்தையை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். ஆனால் அக்குழந்தையோ பெண்மணியிடம் இருக்கப் பிடிக்காமல் மச்சேந்திரரை பின் தொடர்ந்து சென்று பெரிய சித்தர் ஆகி குருவை மிஞ்சிய சீடர் ஆனார்.
Friday, 28 October 2011
ஓங்காரம்...!
ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி
ஓமெனும் ஓங்காரத்துள்ளே உருவரு
ஓமெனும் ஓங்காரத்துள்ளே பலபேதம்
ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒண் முத்தி சித்தியே.
- திருமந்திரம்.
ஓம் என்பதே பிரணவ மந்திரம். ஓம் என்று கூறியே மந்திரங்களை ஓத வேண்டும். ஆதியில் ஓம் என்று கூறியே வேதங்களை ஓதத் தொடங்குவர். பின்னரே "ஹரி ஓம்" என்று அதை மாற்றினர்.
அ , உ , ம்
என்ற மூன்று எழுத்துக்களே ஓம் ஆகும். வாயைத் திறப்பதன் மூலம் அ ஒலியும் உதட்டைக் குவித்தல் மூலம் உ ஒலியும் வாயை மூடுதல் மூலம் ம் ஒலியும் ஒலிக்கும். உலகில் பேசும் மொழி எதுவாயினும் அதற்கு வாயின் இம்மூன்று அசைவுகளும் இன்றியமையாததாகும். ஓம் எந்த மொழியையும் சேர்ந்ததன்று. அது பொதுவாக இறைவனைக் குறிக்கும் ஒரு மந்திர ஒலி.தமிழைப் பொறுத்தவரை "ஓ" வின் அமைப்புப் பிள்ளையாரின் யானை முகத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாம் எழுதத் தொடங்கும் பொழுது போடும் பிள்ளையார் சுழி ( உ) தான் ஓம். மந்திரங்களை ஓதும் பொழுது ஓம் ஒலியுடன் தொடங்குதல் மரபு.
ஔவை சொல்லும் இடைபிங்கலையின் எழுத்தும் அதுவே!
Thursday, 27 October 2011
கண்ணை வைத்துக் கொண்டு வடையைத் தா!!
ஒரு நாள் கோரக்கர் ஒரு வீட்டிற்கு சென்று பிச்சை கேட்டார். அவ்வீட்டுப் பெண்மணி ஒரு வடையை பிச்சையாக இட்டார். கோரக்கர் அவ்வடையைத் தம்முடைய குருநாதர் மச்சேந்திரருக்கு கொடுத்தார். வடையத் தின்ற மச்சேந்திரர் அதன் சுவையில் மயங்கி மறுநாளும் அதுபோல வடை வேண்டும் என்று கேட்டார்.
சீடராகிய கோரக்கர் முதல் நாள் வடையை பிச்சையாக இட்ட வீட்டிற்கு சென்று பிச்சை கேட்டார். அன்று அந்த வீட்டுப் பெண்மணி சாதம் போட்டாள்.கோரக்கர் தமக்கு சாதம் தேவை இல்லை என்றும் வடை தான் வேண்டும் என்றும் கேட்டார்.
அதைக் கேட்ட அந்தப் பெண்மணி, நேற்று வடை சுட்டேன். அதனால் வடையை பிச்சையாக இட்டேன். இன்று வடை சுடவில்லையே, இருப்பதைத் தானே கொடுக்க முடியும். இல்லாததைக் கொடு என்றால் என்ன செய்வது? இருப்பதை பெற்றுக் கொள்ளுங்கள் என்றாள்.
கோரக்கர் அதைக் கேட்டு சமாதானம் அடையவில்லை. தன் குருவானவர் ஒன்றின் மீது ஆசை வைத்துவிட்டார். அதனை நிறைவேற்றுவது சீடராகிய தமது கடமை என்று கூறினார்.
இதைக்கேட்டு எரிச்சலுற்ற பெண்மணி, சரி வடை என்பதால் போயிற்று. இதுவே உன்னுடைய கண்ணைக் கொடு என்றால் உடனே பெயர்த்து கொடுத்து விடுவாயா என்று கோரக்கரிடம் கேட்டாள்.
இதனைக் கேட்ட கோரக்கர் என்னுடைய குரு என் கண்ணைக் கேட்டாலும் கொடுக்கக் காத்திருக்கிறேன் என்று கூறி, அந்தக் கண்ணை நீயே வைத்துக் கொண்டு வடை கொடு என்று தன்னுடைய ஒரு கண்ணை பெயர்த்து அந்தப் பெண்மணியிடம் கொடுத்து விட்டார்.
இதனைச் சற்றும் எதிர்பாராத அந்தப்பெண்மணி, மிகுந்த அச்சம் கொண்டு இனிமையான வடைகளை சுட்டு கோரக்கரிடம் கொடுத்து அனுப்பினாள். அதனைக் கோரக்கர் தன்னுடைய குருவிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.
வடைகளைச் சுவைத்த மச்சேந்திரர், கோரக்கரைப் பார்த்து உனது ஒரு கண் எங்கே என்று கேட்டார். கோரக்கர் நிகழ்ந்ததைக் கூறினார். இதனைக் கேட்ட குரு தன் சீடன் தன்மீது வைத்திருந்த அன்பை உணர்ந்து கோரக்கர் இழந்த கண்ணைத் திரும்பப் பெறுமாறு செய்தார்.
Saturday, 22 October 2011
திருவண்ணாமலை சித்தர் - சப்தகந்த அடியார்!
தினசரி ஏழு முறை திருவண்ணாமலையை கிரிவலம் வரும் இவர் மாதத்தில் ஏழு நாட்கள் மட்டுமே உணவு உட்கொள்வாராம். மீதி நாட்களில் உண்ணா நோன்பு இருப்பாராம்.
எப்போதும் இவரது உடலில் இருந்து ஒருவித நறுமணம் வீசுமாம். இவரது தலைமுடி பொற்கம்பி இழைகளாக இருக்குமாம். ஆனால் இவைகள் தாமாக எப்போதும் உதிர்வதில்லையாம். மாத சிவராத்தி தொடங்கி ஏழு நாட்கள் இவர் கிரிவலம் செய்யத்தொடங்கும் காலம். இந்தக் காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடி உதிருமாம்.
ஆனால் அப்படி உதிர்ந்தமுடிகள் நம் கண்களில் காண முடியாதாம். அந்தப் பொன் முடிகள் உதிர்ந்த இடங்களில் எல்லாம் லிங்கங்கள் தோன்றுமாம். இவ்வாறு ஏழு கிரிவலங்களிலும் ஏழு பொன்முடிகள் உதிர்ந்த இடங்களில் ஏழு சிவலிங்கங்கள் தோன்றின. அவை சப்தகந்த லிங்கங்கள் என்று அழைக்கப்பட்டன.
ஒவ்வொரு கிரிவலத்தின் போதும் இவர் தலைமுடி உதிர உதிர இறைவனே அவருக்கு காட்சியளித்து முதல் கந்தம் முற்றியது, இரண்டாம் கந்தம் முற்றியது என ஏழு கந்தங்களுக்கும் இறைவன் சொல்வாராம். அப்படி இறைவன் சொல்லிய இடங்களில் தோன்றிய லிங்கங்களே சப்தகந்த லிங்கங்கள் என்றும் கூறப்படுகின்றன.
Friday, 21 October 2011
திருவண்ணாமலை சித்தர் - பத்ராச்சல சுவாமிகள்!
எத்தனையோ சித்தர்கள் ஏன் என்ற சிந்தனை கொள்ளாமல் இறைவன் இங்கு தான் இருக்கின்றான் என்று உறுதி செய்து இறைவனை வழிபட்ட தலம் திருவண்ணாமலை. இந்த அண்ணாமலையில் மனிதர் எவருடைய தயவையும் நாடாமல் தவத்தைத் தொடர்ந்த சித்தர்களுள் பத்ராச்சல சுவாமிகளும் ஒருவர்.
இவரது பூர்வீகம் எது என்று தெரியாத நிலையில் அழுக்குத் துணிமூட்டை ஒன்றைக் கையிலேந்தி காலில் ஒரு வளையம் அணிந்து தேரடிக்கு அருகில் மனித சிந்தனையற்று அமர்ந்திருப்பார். அங்கு படிந்திருக்கும் மணலில் வரிசை வரிசையாக ஏதோ எழுதிக் கொண்டிருப்பார். யாரேனும் எதுவும் கேட்டால் கூட பதில் எதுவும் சொல்ல மாட்டார்.
மனிதருக்கு பசியெடுத்தால் பிச்சை எடுக்க வேண்டும் அல்லவா? இவர் எந்த வீட்டிலாவது அல்லது உணவு விடுதியிலாவது யாசகம் கேட்டு யாரும் பார்த்தது இல்லை. இவர் தனக்கு வேண்டிய உணவு உடைக்காக யாருடைய தயவையும் நாடவில்லை. மிகவும் எளிதாகக் கிடைக்க கூடியதும் பிறர் விரும்பாததுமான ஒன்றினை உணவாகக் கொண்டிருந்தார் என்பர்.
அண்ணாமலையாரை மட்டும் அனுதினமும் வணங்கி அமைதியான வாழ்க்கையத் தொடர்ந்த இந்த அபூர்வ சித்தர் சேஷாத்ரி ஆசிரமத்தினருகில் சாமாதியடைந்தார். பிறருக்கு நன்மை செய்யாவிட்டால் கூட எந்தத் தீமையும் செய்யாமலிருத்தல் கூட ஒரு பெரிய தவம் என்று உலகுக்கு உணர்த்திய மகாஞானி இந்தச்சித்தர்.
Monday, 17 October 2011
தங்க மோகம் இல்லாத பெண்...!
சிவவாக்கியர் ஒரு நாள் கொங்கணச் சித்தரைச் சந்திக்க நேரிட்டது. இருவரும் அளவளாவி மகிழ்ந்தார்கள். அதன் பிறகு கொங்கண சித்தர் அடிக்கடி சிவவாக்கியரை வந்து பார்த்துச் செல்வது வழக்கமாக இருந்தது.
கொங்கண சித்தர் பார்க்க வரும் போதெல்லாம் சிவவாக்கியர் மூங்கில் வெட்டுவதும் கூடை பின்னுவதுமாக இருந்ததைப் பார்த்த கொங்கண சித்தர், சிவவாக்கியர் எல்லா வித்தைகள் அறிந்திருந்தும் வறுமையில் உழல்கிறாரே என்று எண்ணி வருந்தினார்.
ஒருநாள் சிவவாக்கியர் இல்லாத போது வந்த கொங்கண சித்தர், சிவாக்கியரின் மனைவியிடம் இரும்புத் துண்டு கொண்டு வரும்படி கூறினார்.அவரும் தேடிப்பிடித்து ஒரு இரும்புத்துண்டை கொண்டு வந்து கொடுத்தார். கொங்கண சித்தரும் அதை உடனே தங்கமாக மாற்றிக் கொடுத்து விட்டுப் போனார்.
சிவவாக்கியர் வீட்டிற்கு வந்ததும் நடந்த விபரத்தை அவரது மனைவி கூறவும், சிவவாக்கியர் அந்த தங்கத்துண்டைக் கையால் கூட தொடாமல் கிணற்றில் போடும்படி உத்தரவிட்டார்.
அவரது மனைவியும் அவர் கூறிய படியே அந்தத் தங்கத்துண்டை பாழும் கிணற்றில் போட்டுவிட்டு வந்தார்.
இருப்பினும் சிவவாக்கியருக்கு தனது மனைவி மீது சிறிது சந்தேகம் இருந்தது. ஒருவேளை அவள் தங்கத்தின் மீது ஆசை வைத்திது கொங்கணவரிடம் கேட்டிருப்பாளோ என்று எண்ணி அதனைச் சோதிக்கவும் விரும்பினார்.
ஒரு செங்கல்லை எடுத்து வரச்சொல்லி அதன் மீது சிறுநீர் கழித்தார். பின் அதன் மீது தண்ணீரை ஊற்றும்படி கூறினார். சிறிது நேரத்தில் செங்கல் தங்கமாக மாறியது. அதனை எடுத்துக்கொள்ளும்படி மனைவியிடம் கூறினார். ஆனால் அவர் மனைவியோ தனக்கு தங்கம் வேண்டாம் என்று கூறிவிட்டாள். மனைவியின் பக்குவத்தை உணர்ந்த சிவவாக்கியரின் மனம் மகிழ்ந்தது.
Saturday, 15 October 2011
திருமாளிகைத்தேவரும் பூஜையும்!
திருமாளிகைத்தேவர் வழக்கம் போல ஆற்றில் நீராடிவிட்டு பூக்கூடையில் பூக்களும் குடத்தில் அபிஷேகத்திற்கான நீரும் எடுத்துக்கொண்டு கோவிலை நோக்கிப் புறப்பட்டார். சிறிது தூரம் தான் சென்றிருப்பார். எதிரே ஒரு சவ ஊர்வலம்.
பிணத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் அதே வழியில் கோயிலுக்கு செல்ல முடியுமா? அவர் மீண்டும் குளித்துவிட்டு சென்றால் சாந்தி செய்தது போலாகும். ஆனால் பூஜைக்குரிய காலம் கடந்துவிடுமே என்று கவலையாகி விட்டது சித்தருக்கு. பக்கத்தில் விநாயகர் கோயில் இருந்தது. பிள்ளையாரப்பா இப்போது நீ தான் ஒரு வழி பண்ணனும் என்று வேண்டிக்கொண்டார்.
பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது. பாடையில் சவாமாய் கிடந்தவன் உயிர் பெற்று எழுந்தான்.
சரி ஒருநாள் பிள்ளையார் காப்பாற்றி விட்டார். இதே போன்ற இக்கட்டுகள் அடிக்கடி வந்தால் என்ன செய்வது என்று யோசித்தார் திருமாளிகைத்தேவர். யோசனை பிறந்தது. நடைமுறைப் படுத்தலானார்.
ஆற்றில் நீராடி அனுஷ்டானங்கள் முடித்ததுமே பூக்கூடையையும் நீர்க் குடத்தையும் ஆகாயத்தை நோக்கி வீசிவிட்டு கோயிலுக்கு நடப்பார். மேலே பூக்கூடையும் நீர்க்குடமும் ஆகாய மார்க்கமாக அவர் கூடவே தொடர்ந்து வரும். கோயில் வாசலுக்கு வந்ததும் அவை அவருடைய கைக்கு வந்து சேரும். அவர் பூஜையை நிமதியாக செய்து முடிப்பார்.
Thursday, 13 October 2011
இடைக்காடரின் வானியல் அறிவு...!
இடைக்காடர் மருத்துவ யோக முறைகளில் போலவே சோதிடத்திலும் வானியலிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.
ஒரு சமயம் பெரும் பஞ்சம் வரப்போவதை அவர் முன்கூட்டியே அறிந்தார். ஊர் மக்களுக்கு சொல்லவும் செய்தார். அவர்கள் அவர் சொல்லை அலட்சியம் பண்ணினார்கள். அதனால் அவர்கள் பஞ்சம் வந்த போது பட்டினியால் வாடும்படி நேரிட்டது. அவர்களுடைய கால்நடைகள் மேய்ச்சலின்றி உயிர் விட்டன.
ஆனால், இடைக்காடரின் ஆடுகள் சாகவில்லை.அவர் முன்கூட்டியே தமது ஆடுகளுக்கு எருக்கிலை திண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். எந்த வறட்சிக் காலங்களிலும் எருக்கஞ்செடிகள் மண்டிக்கிடக்கவே செய்யும்.
இடைக்காடர் பஞ்சம் பற்றிய முன்னெச்சரிக்கையுடன் வீடு கட்டும் போது குருவரகு என்னும் தானியத்தை களிமண்ணோடுகலந்து தான் கட்டி இருந்தார். எருக்கிலை தின்ற ஆடுகள் உடலில் அரிப்பு உண்டாகி அரிப்பைப் போக்கிக் கொள்ள வீட்டுச் சுவர்களில் உராய்ந்துகொண்டன. அப்போது களிமண்ணோடு கலந்திருந்த தானியங்கள் உதிர்ந்தன. அவற்றை சமைத்துண்டு உயிர்பிழைத்தார் இடைக்காட்டுச் சித்தர்.
போகரும் திருமாளிகைத் தேவரும்...!
ஒருநாள் போகரும் திருமாளிகைத் தேவரும் கோயிலிலிருந்து திரும்ப வெகு நேரமாகிவிட்டது. அவர்களுக்கு தீவட்டி பிடித்து வழி காட்டுகிற வேலையாள் உறங்கிவிட்டான். திருமாளிகைத் தேவர் தானே தீவட்டிப் பிடித்து போகருக்குப் பக்கமாய் சென்றார்.
தான் தங்கியிருந்த இடம் வந்துவிட, 'போதும் தீவட்டி இங்கயே இருக்கலாம்' என்று சொல்லி போகர் உள்ளே சென்று விட்டார். தீவட்டி பிடித்த நபரை அவர் திரும்பியும் பார்க்கவில்லை. குருவின் வார்த்தையைக் கட்டளையாக் கொண்டு திருமாளிகைத் தேவர் வாசலிலேயே நின்று விட்டார். ஒரு கையில் கோவில் பிரசாதம். மறு கையில் தீவட்டி. இரவு முழுவதும் கண்ணுறங்காது காலடி பிறழாது அங்கேயே நின்றார்.
பொழுது நன்றாக விடிந்தது. விழித்தெழுந்த போகர் திருமாளிகைத் தேவரை காணாமல் வெளியே வந்தார். சீடர் வாசலிலேயே நின்றிருந்தார். நடந்தவற்றைத் தனது ஞானசக்தியில் தெரிந்து கொண்ட போகர், சீடரின் குருபக்தி கண்டு மகிழ்ந்தார். அவரை ஆசிர்வதித்தார். குண்டலினி உனது வசமாகட்டும் என்று கூறி யாத்திரை புறப்பட்டுச் சென்றார்.
அன்று முதல் குருவருளால் நினைத்த மாத்திரத்தில் குண்டலினியை எழுப்பும் சக்தியை திருமாளிகைத் தேவர் அடைந்தார்.
Thursday, 29 September 2011
சகலகலாவல்லி மாலை...!
வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க வொழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய் தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய் பங்கயாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைப் பாற்
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே.
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்அமுதுதார்ந்து உன் அருட் கடலில்
குளிக்கும் படிக்கென்று கூடும் கொலொ உளங் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.
தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியும் சொற் சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
பஞ்சப் பிதந்தரு செய்ய பொற்பாதம் பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராது என்னே நெடுந்தாட் கமலத்
தஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவு மகமும் வெள்ளைக்
கஞ்சத்தவி சொத்திருந்தாய் சகல கலாவல்லியே.
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுதெளிது எய்த நல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே.
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.
சொல்விற் பனமும் அவதான முங்கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளினாசனஞ்சேர்
செல்விக்கு அரிது என்றொரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகல கலாவல்லியே.
சொற்கும் பொருட்கும் உயிரா மெய்ஞ் ஞானத்தின் ஒற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலந்தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பிலும் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே.
குமரகுருபர சுவாமிகள்
Monday, 12 September 2011
நாத விந்து கலாதி நமோ நம...!
நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர ஸ்வரூபா நமோ நம
ஞான பண்டித ஸ்வாமி நமோ நம வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூரா நமோ நம பரசூரர்
சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம கிரிராஜ
தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள்தாராய்
ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோஹர
ராஜ கம்பீர நாடாளு நாயக வயலூர
ஆதரம் பயிலாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலையிலேகி
ஆதி அந்தவுலாவாசு பாடிய
சேர்தல் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே
Thursday, 8 September 2011
சிவாஷ்டகம்...!
ப்ரபும் பிராண நாதம் விபும் விஷ்வநாதம்
ஜகன் நாத நாதம் சதானந்த பாஜம்
பவத் பவ்ய பூதேஷ்வரம் பூத நாதம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
கலே ருண்ட மாலம் தனு சர்ப்ப ஜாலம்
மகா கால காலம் கணேஷாதி பாலம்
ஜடா ஜூட கங்கோ தரங்கை விஷிஷ்யம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
முதா மாகரம் மண்டரம் மண்ட யந்தம்
மகா மண்டலம் பஸ்ம பூஷாதரம்தம்
மனாதிம் ஹ்யபாரம் மகா மோஹமாரம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
டடாதோ நிவாசம் மஹா அட்டகாசம்
மஹா பாப நாசம் சதா சுப்ர காஷம்
கிரீஷம் கணேஷம் சுரேஷம் மகேஷம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
கிரிந்தாத்ரா மஜா சங்க் ஹிதார்த்த தேகம்
க்ரௌ சம்ஸ்திதம் சர்வதா சன்னிகேஹம்
பரப்ரம்ஹா ப்ரம்மாதி வில்வந்த்ய மானம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
கபாலம் த்ரிஷுலம் கராபியாந்த தானம்
பதாம் போஜனம் ராய காமந்த தானம்
பலி வர்த்தயானம் சுராணாம் பிரதானம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
சரத் சந்திர காத்ரம் குணானந்த பாத்ரம்
த்ரிநேத்ரம் பவித்ரம் தனே ஷச்ய மித்ரம்
அபர்ணா களத்ரம் சரித்ரம் விசித்ரம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
ஹரம் சர்ப்ப ஹாரம் சிதா பூவிஹாரம்
பவம் வேத சாரம் சதா நிர்விகாரம்
ஸ்மஷாலே வசந்தம் மனோஜம்த ஹந்தம்
சிவம் சங்கரம் ஷம்பு மீஷான மீதே
தவம்யத் ப்ரபாதே நர சூல பானே
படே ஸ்தோத்ர ரத்தம் விஹா ப்ராப்ய ரத்தம்
சபுத்ரம் சுஜானம் சுமித்ரம் களத்ரம்
விசித்ரை சமா ராத்யா மோக்ஷம் ப்ரயாதி
Wednesday, 7 September 2011
சித்தர்கள் பதினெண்மர் பாதம் போற்றி!
"நந்தி அகத்தியர்மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர்
நந்தியிடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
கருவூரார்கொங்கணவர் காலாங்கி
சிந்தியெழுகண்ணர் அகப்பேயர்பாம்பாட்டி
தேரையரும்குதம்பையரும் சட்டைநாதர்
செந்தமிழ்சேர் சித்தர்பதினெண்மர் பாதம்
சிந்தையுன்னி சிரத்தணியாய் சேர்த்திவாழ்வா"
"ஓம் நமசிவாயா"
Tuesday, 6 September 2011
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி...!
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே!
Saturday, 3 September 2011
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்...!
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானிலம் மீதினில் யார் இனி வருவார்
வீணையில் இன்னிசை தேனென தந்திடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
விண்ணையும் மண்ணையும் பண்ணையும் தந்தவன்
என்னையும் உன்னையும் பாடிட வைத்திடுவான்
பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
உன்னை வென்றிடுவேன்
இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன்
எனை தேடி எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன்
எனை தேடி எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
நடித்தான் தமிழை படைத்தான்
இசையை வடித்தான் தன்னை மறந்தனனே
முத்தமிழ் புலமை சித்தனும் எனது வித்தகம் கண்டு பரிவுடனே
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
யாரபிமானம் மானம் கொள்வார்
யாரபிமானம் மானம் கொள்வார்
பெரும் அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே
அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே
யாரபிமானம் மானம் கொள்வார்
வெற்றி எட்டு திசை முட்டவே
பெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா
தனித்து நினைத்து மனத்தை மறைத்து
கொடுத்த வரத்தை கணத்தில் மறந்தனையே
யாரபிமானம் மானம் கொள்வார்
சண்முகப்பிரியன் எனும் தைரியமா
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
சண்முகப்பிரியன் எனும் தைரியமா
இனிய சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
நாடகமா தர்பார் நாடகமா
அடக்குமுறை தர்பார் நாடகமா
எதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
அம்சத்வனி அமைந்த மன்னவன் நான்
அனைத்தும் உன் வசம்தானா ஆணவம் ஏன்
அம்சத்வனி அமைந்த மன்னவன் நான்
அனைத்தும் உன் வசம்தானா ஆணவம் ஏன்
மோகன கானம் நான் மீட்டிடுவேன்
மனோ லயம் இல்லை உன் பாட்டினிலே
மோகன கானம் நான் மீட்டிடுவேன்
மனோ லயம் இல்லை உன் பாட்டினிலே
பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
யார் வந்தால் என்ன காம்போதி
யார் வந்தால் என்ன காம்போதி
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
கௌரி மனோகரி துணை இருப்பாள்
கௌரி மனோகரி துணை இருப்பாள்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
சரஸ்வதி என்நாவில் குடியிருப்பாள்
சரஸ்வதி என்நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
உன்னை வென்றிடுவேன்
Friday, 26 August 2011
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய!
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த
முக்கண் அரசே போற்றி!
சிவ ஓம் நமசிவாய!
தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே
சூல நாதனே போற்றி!
ஹர ஓம் நமசிவாய
ஒளியே நமசிவாயம்
உணர்வே நமசிவாயம்
வெளியே நமசிவாயம்
விசையே நமசிவாயம்
மோன வடிவாகி மோகனம் காட்டும்
மூர்த்தி லிங்கனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
ஞானம் வழங்கி நற்கதி அருளும்
நந்தி வாகனா போற்றி!
ஹர ஓம் நமசிவாய
ராகம் நமசிவாயம்
ரகசியம் நமசிவாயம்
லோகம் நமசிவாயம்
யாகம் நமசிவாயம்
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
அர்த்தநாரியாய் வித்தகம் செய்யும்
அருணாச்சலனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
நர்த்தனம் தாண்டவம் நாடகமாடும்
நாக நாதனே போற்றி!
ஹர ஓம் நமசிவாய
அறிவும் நமசிவாயம்
அசைவும் நமசிவாயம்
இலையும் நமசிவாயம்
நிறைவும் நமசிவாயம்
ரமணமுனிக்கு ரகசியம் சொன்ன
ராஜலிங்கனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
இமையோர் தலைவன் பதவியும்
வழங்கும் ஈச மகேசா போற்றி!
ஹர ஓம் நமசிவாய
கோடையும் நமசிவாயம்
கொண்டலும் நமசிவாயம்
வாடையும் நமசிவாயம்
தென்றலும் நமசிவாயம்
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
பரணி தீபமாய் தரணியில் ஒளிரும்
பரமேஸ்வரனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
ஹர ஹர என்றால் வரமழை
பொழியும் ஆதிலிங்கனே போற்றி!
ஹர ஓம் நமசிவாய
சித்தியும் நமசிவாயம்
புத்தியும் நமசிவாயம்
பக்தியும் நமசிவாயம்
சக்தியும் நமசிவாயம்
கார்த்திகைத் திருநாள் உற்சவம்
காணும் தீபச் சுடரே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
தீர்த்தம் யாவிலும் நீராடிடுவாய்
அருணாச்சலனே போற்றி!
ஹர ஓம் நமசிவாய
நிலவே நமசிவாயம்
நிஜமே நமசிவயம்
தலையே நமசிவாயம்
நினைவே நமசிவாயம்
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய-
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
சுற்றிட சுற்றிட வெற்றிகள்
வழங்கும் சோனாச்சலனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
பொற்சபை தன்னில் அற்புத நடனம்
புரியும் பரனே போற்றி!
ஹர ஓம் நமசிவாயம்
எங்கும் நமசிவாயம்
லீலையும் நமசிவாயம்
கங்கையும் நமசிவாயம்
கருணையும் நமசிவாயம்
சோனை நதிதீரம் கோவில் கொண்ட
அருணாச்சலனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
வானவெளிதனை கோபுரமாக்கி
மலையில் நிறைந்தாய் போற்றி!
ஹர ஓம் நமசிவாய
செல்வம் நமசிவாயம்
சீரும் நமசிவாயம்
வில்வம் நமசிவாயம்
வேஷம் நமசிவாயம்
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
ஆதிரை அழகா ஆவுடை மேலே
அமரும் தலைவா போற்றி!
சிவ ஓம் நமசிவாய
வேதியர் போற்றும் வெண்சடை இறைவா
வேதப் பொருளே போற்றி!
ஹர ஓம் நமசிவாய
முதலும் நமசிவாயம்
முடிவும் நமசிவாயம்
இடையும் நமசிவாயம்
விடையும் நமசிவாயம்
நாக முடியுடன் யோகம் புரியும்
நாகேஸ்வரனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
தேக நடுவிலே திருநீர் அணியும்
அருணேஸ்வரனே போற்றி!
ஹர ஓம் நமசிவாயம்
அம்மையும் நமசிவாயம்
அப்பனும் நமசிவாயம்
நன்மையையும் நமசிவாயம்
நாதனும் நமசிவாயம்
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
அடிமுடி இல்லா ஆனந்த வடிவே
அண்ணாமலையே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
அம்மை அப்பனாய் அகிலம் காக்கும்
அமுதேஸ்வரனே போற்றி!
ஹர ஓம் நமசிவாய
அதுவும் நமசிவாயம்
இதுவும் நமசிவாயம்
எதுவும் நமசிவாயம்
எதிலும் நமசிவாயம்
விடையாம் காளை வாகனமேறி
விண்ணில் வருவாய் போற்றி!
சிவ ஓம் நமசிவாய
வேண்டிய கணமே எண்ணிய கணமே
கண்ணில் தெரிவாய் போற்றி!
ஹர ஓம் நமசிவாய
சூலம் நமசிவாயம்
சுகமே நமசிவாயம்
ஈலம் நமசிவாயம்
வித்தியும் நமசிவாயம்
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
பௌர்ணமி நாளில் பிறைநிலவணியும்
மகாதேவனே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
ஔஷத மலையாய் பிணிகள் தீர்க்கும்
அருணாச்சலனே போற்றி!
ஹர ஓம் நமசிவாய
தீபம் நமசிவாயம்
திருவருள் நமசிவாயம்
ரூபம் நமசிவாயம்
ருத்ரம் நமசிவாயம்
பனி கைலாயம் தீவடிவாகிய
அண்ணாமலையே போற்றி!
சிவ ஓம் நமசிவாய
தனி வடிவாகிய தென்னாடுடையாய்
திருவருளேசா போற்றி!
ஹர ஓம் நமசிவாயம்
எங்கும் நமசிவாயம்
எல்லாம் நமசிவாயம்
எழிலும் நமசிவாயம்
என்றும் நமசிவாயம்
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
விநாயகனே வினை தீர்ப்பவனே!
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
Subscribe to:
Posts (Atom)

