அவதார புருஷர்கள் மறையும் போது அடுத்தடுத்த அவதாரத்தில் முற்பிறவியின் கடமைகள், நிகழ்வுகள் போன்றவை தங்களுக்கு நினைவுக்கு வர சில அடையாளங்களை விட்டுச் செல்வார்கள். அப்படி இராமபிரானால் விட்டுச் செல்லப்பட்டவரே சிரஞ்சீவியான அனுமன்.
இராமாவதாரம் முடிந்து இராமன் வைகுண்டவாசம் புறப்பட்ட நிலையில் தன்னுடன் வருமாறு அனுமனையும் அழைத்தார். அழைப்பினை அனுமன் மறுத்து அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
உங்களை இராமபிரானாகவே இதுவரையில் பார்த்து மகிழ்ந்திருக்கின்றேன். வைகுண்டம் சென்றால் உங்களை விஷ்ணுவாகத் தான் பார்க்க முடியும். அது மட்டுமில்லாமல் சீதா தேவியோடு பார்த்த உங்களை திருமகளோடு பார்க்க என் மனம் ஒப்பாது. மேலும் நான் வைகுண்டம் வரவேண்டும் என்றால் இந்த உடலையும் துறந்தாக வேண்டும். அது என்னால் இயலவே இயலாது.

இராமபிரானாக வாழ்ந்த நீங்கள் என்னை கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்த உடல் இது. இப்பேர்ப்பட்ட பாக்கியத்தை அடைந்த இந்த உடலை எப்படி துறப்பேன்? இராமநாமம் எங்கெல்லாம் இப்பூவுலகில் உச்சரிக்கபடுகின்றதோ அங்கெல்லாம் உங்கள் நினைவோடு நான் வாழ்வேன் என்று சொல்லி மறுத்து விட்டார் அனுமன்.
ஆதிசேஷன் இராமாவதாரத்தில் லஷ்மணனாக அவதரித்து இராமனுக்கு சேவை செய்தார். லஷ்மணனையே தனக்கு அண்ணனாக பலராமராக கிருஷ்ண அவதாரத்தில் பிறக்க வைத்து அவருக்கு பாதசேவை செய்தார் கிருஷ்ணர். அது போன்றே தனக்கு தாசனான அனுமனை தன் கொடியின் சின்னமாக பிம்ப ஆவாஹனம் செய்து தன் தலைக்கு மேலே உயர்த்தி வைத்தார். கிருஷ்ணரின் தேரில் இருக்கும் கொடியின் சின்னத்தில் அனுமன் இருப்பார்.
மகாபாரதப் போரின் இறுதியில் தேரில் இருந்து அர்ஜூனனையே முதலில் இறங்கச் சொல்வார் கிருஷ்ணர். ஆனால் முறைப்படி தேர்ப்பாகனே முதலில் இறங்க வேண்டும். இதில் அர்ஜூனனுக்கு மனவருத்தம் இருந்தாலும் கிருஷ்ணர் பேச்சை மீற இயலாத நிலையில் அர்ஜூனன் முதலில் இறங்குவான். அதன் பிறகே கிருஷ்ணர் இறங்குவார். கிருஷ்ணர் இறங்கிய மறுகணமே தேரின் கொடியில் இருந்த அனுமன் கொடியை விட்டு மறைந்து விடுவார். தேரும் சுக்குநூறாக வெடித்துச் சிதறிவிடும். அனுமன் தான் அரணாக காத்து நின்றார் என்றும் கிருஷ்ணர் ஏன் தன்னை முதலில் இறங்கச் சொன்னார் என்பதையும் அர்ஜூனன் புரிந்து கொள்வான். மீண்டும் தலைப்பை படியுங்கள்.
காரணமில்லாமல் காரியமில்லை.

0 comments:
Post a Comment